பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் கைது

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்களை CCTV காட்சிகள் மூலம் தேவகோட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைப் பகுதியில் பல்வேறு கடைகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதையடுத்து அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் கொள்ளையர்கள் வெளிமாநிலத்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து காரைக்குடி தனியார் தங்கும் விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்த கர்நாடகா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version