தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் பணி செய்யாதபடி புதிய சட்டம் ஒன்று இயற்றக் கோரி, தமிழ் தேசிய பேரியக்கத்தினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெளி மாநிலத்தினரின் வருகை பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும், அவர்கள் மத்திய, மாநில அரசு பணிகள் மட்டுமின்றி, அனைத்து தனியார் துறைகளிலும் பணியாற்றும் சூழல் அதிகரித்து விட்டதாகவும், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போல, பிற மாநிலத்தவர் தமிழகத்தில் பணியாற்ற முடியாதபடி புதிய சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர்.