அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பை விட 2 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் எனக் கூறிய அவர், வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடும், நெல்லை மற்றும் ராமநாதபுரத்தில் 45 விழுக்காடும் பதிவாகியுள்ளதாக கூறினார். குறைந்தபட்சமாக மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் 25 விழுக்காடு மழை பெய்திருப்பதாக தெரிவித்தார். சென்னையில் 16 விழுக்காடு மழை பதிவாகியிருப்பதாக தெரிவித்த புவியரசன் , அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.