வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு!!

அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக  மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல ஆறுகளில் அபாய கட்ட அளவை தாண்டி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வெள்ளத்தால், அம்மாநிலத்தின்  128 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு விலங்குகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வீடு மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது..

கோல்பரா மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக நால்பரி மாவட்டத்தில் பதினோராயிரம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். நாகான் மாவட்டத்தில் உள்ள போர்குலி பகுதியில் இருந்த மசூதி கட்டடம், பிரம்மபுத்திரா வெள்ள நீரில் இடிந்து விழுந்தது..  பிரம்மபுத்திராவை பொறுத்தவரை வெள்ளப்பெருக்கு என்பது  ஆண்டுதோறும் நிகழும் ஒரு சம்பவமாகவே நீடிக்கிறது.. வெள்ளப்பெருக்கை தடுக்கவும், பிரம்மபுத்திரா நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கட்டமைப்பு பணிகளை துவங்கி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version