வடகிழக்கு பருவமழையால் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் உதகை குந்தா சாலைப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில்,உதகை குந்தா நெடுஞ்சாலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து, மேலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியது. நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் உதகை முதல் குந்தா வரை 10 JCP எந்திரங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version