வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர்,வேலூர், சென்னை, திருவாரூர், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, நெல்லை,குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் 2 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையாக 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 32 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.