சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள 57 சிறார் மன்றங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு காரணமான அதிகாரிகளுக்கு, மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறார் மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்பிற்கான பயிற்சிகள், ஒட்டுநர் பயிற்சி, தையல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்று கூறினார். சிறார் மன்ற குழந்தைகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று அவர் கேடுக்கொண்டார்.