வடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க தயார் : டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டுக்கு பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்தனர். இதனையடுத்து கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2வது முறையாக, டிரம்பும் – கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version