பொருளாதார தடைகளை விதிக்க முயற்சித்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தாண்டு தினத்தில், வடகொரிய மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கிம் ஜோங் உன், எந்த நேரத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.
அதே நேரத்தில், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். பொருளாதாரத் தடைகள் என்ற பெயரில், நெருக்கடிகளை கொடுக்க முயற்சித்தால், நாட்டின் இறையாண்மையை காக்க வேறுவழிகளை நாட வேண்டியிருக்கும் என்று அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார்.