அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதிய நிபந்தனை விதித்துள்ளது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி, வட கோரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகள் செய்து வந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்நிலையில் கடந்து ஆண்டு ஜூன் மாதம், இரு நாட்டுத் தலைவர்களும், சிங்கப்பூரில் பேச்சு நடத்தினர்.
அதே போல் வியட்நாமில் 2-வது முறையாக இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசினர். அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களைக் கைவிடுவது பற்றி பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் சோ ரியாங் ஹே பேசுகையில், அணு ஆயுதங்களைக் கைவிடுவது பற்றி அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும், ஆனால் அமெரிக்கா, தங்கள் மீதான பகைமைப் போக்கையும், ராணுவ, அரசியல் அச்சுறுத்தல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.