தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே போர் பதற்றம் இருந்து வரும் நிலையில், குறுகிய தூரம் சென்று தாக்கும் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வட கொரியா நிகழ்த்தியுள்ளது. இந்த சோதனை அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் நிகழ்த்தியுள்ளதாகவும் அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆலோசனைப்படி இது நிகழ்ந்துள்ளதாகவும் வடகொரியா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை வடகொரியா சோதனை செய்தது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.