வடகொரியாவுக்கு வருமாறு டிரம்புக்கு வடகொரியா அதிபர் அழைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க – தென்கொரிய படையினர் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் அணு ஆயுதத் தடுப்புத் தொடர்பாக அமெரிக்கா, வடகொரியா இடையில் மீண்டும் பேச்சு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாண வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் நான்காவது முறையாகச் சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கடிதம் ஒன்றைக் கடந்த மாத இறுதியிலேயே கிம் ஜாங் உன், டிரம்புக்கு அனுப்பியதாகத் தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கடிதம் குறித்து வடகொரியாவோ, அமெரிக்காவோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Exit mobile version