கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ராணுவ கூட்டுப் பயிற்சியை துவங்கி நடத்தி வருகின்றன. இதனை எதிர்க்கும் நோக்கில், வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.
இதனால் வடகொரியா- அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியிருந்தது. கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது. இந்தநிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.