வட கொரியா – ரஷ்யாவின் உறவை பலப்படுத்த, இருநாடுகளின் அதிபர்களும் சந்தித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.
ரஷ்ய நாட்டின் விளாடிவோஸ்டாக் நகரின் ரஸ்கி தீவில் உள்ள ஈஸ்ட் ஃபெடரல் பல்கலைக்கழக வளாகத்தில், அந்நாட்டின் அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், அணு ஆயுதங்கள் குறித்தும், இந்த பேச்சுவார்த்தையில் மூலம் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன், புதினுடனான முதல் சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதாக கூறினார். பின்னர் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, இருநாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்த ரஷ்யா உதவும் என்று கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிந்த நிலையில், விளாடிமிர் புதினுடனான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ன் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.