வடகிழக்கு பருவமழை விரைவில் முடிவுக்கு வர உள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 437 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பொழியும், ஆனால், இந்த ஆண்டு 335 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக பெய்யும் மழையை காட்டிலும், 23 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளதாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதல் மழை பெய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான அளவுக்கு மழை பெய்துள்ளது. 30 மாவட்டங்களில் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது. சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில், 50 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துள்ளது.
கோவையில், அக்டோபர் மாதத்தில் பரவலாக மழை கிடைத்தது. ஆனால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குறைந்த அளவு மழையே பெய்துள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.