கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

காஷ்மீர், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியும் பனிப்பொழிவு குறையவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடும் குளிர் நிலவுகிறது. பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டு உள்ளன. எங்கு பார்த்தாலும், வெண்ணிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ராஜோரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

இதேபோன்று, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. செடிகள், வீடுகள் மீது படர்ந்துள்ள பனி, உறைந்து ஐஸ்கட்டியாக காணப்படுகிறது. குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க நெருப்பு மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர்.

Exit mobile version