அமீரகத்திலிருந்து விண்வெளிக்கு செல்லவிருக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நோரா அல் மற்றோஷி.
நாசாவுடன் பணியாற்ற 4000 ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் அமீரகத்தை சேர்ந்த நோரா அல் மற்றோஷி என்ற பெண்ணும் ஒருவர்.
இது குறித்து அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நாசாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்களில் பணியாற்ற விண்ணபித்த 4000 பேரில் இருந்து இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோரா அல் மற்றோஷி மற்றும் முகமது அல் முல்லா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்றும், அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி ஆராய்ச்சியாளராக மற்றோஷியை அறிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்
ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ட்விட்டர் பாராட்டை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் மற்றோஷி “ இந்த நாளை என்னால் மறக்க முடியாது. நமது மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்படியாக சாதனைகள் செய்வதே என் குறுக்கோள். தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைக்கும் அமீரக விண்வெளி ஆராய்ச்சிக்குழுவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.