ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று, கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு பதவியிடத்துக்கும் ஆயிரக்கணக்கில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 19-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Exit mobile version