நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவையில் வாக்குரிமை உண்டு எனவும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் லாபத்தை கணக்குப் போட்டு கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.