ஆலையைத் திறப்பது நோக்கமல்ல: ஸ்டெர்லைட் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் கருத்து

‘ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’

உயிர் பிரச்சினை என்பதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் -எல்.முருகன் (பாஜக)

மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து அரசின் முழு கண்காணிப்புடன் ஆக்சிஜன் உற்பத்திக்காக செயல்பட அனுமதிக்கலாம் – கனிமொழி (திமுக)

ஸ்டெர்லைட் ஆலை முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அரசே ஏற்று நடத்த வேண்டும் ; அலையை அரசுடைமையாக்க வேண்டும் – ஜி.முத்தரசன் (சிபிஐ)

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்தி, ஆகஸிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது – கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: 

நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆலையை திறக்க வேண்டியது அரசின் நோக்கமல்ல ஏனென்றால் இந்த ஆலையை மூடியது தமிழக அரசு தான். இன்றைய சூழலில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

Exit mobile version