நோபல் பரிசு பெரும் அளவிற்கு நான் தகுதியானவன் அல்ல-இம்ரான்கான்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி பாதுகாப்பு படை வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 42க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பதில் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறைபிடித்தனர். இதன்பின் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று #NobelPeacePrizeForImranKhan ஹேஷ்டாக் சமூக வலைத்தளங்களில் கடந்த இருநாட்களாக பரவியது. இத்தகைய ஹேஷ்டாக்கிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்துள்ளார்.

அதில், ” நான் நோபல் பரிசு பெரும் அளவிற்கு தகுதியானவன் அல்ல”. யார் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்கிறார்களோ அவர்தான் நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version