இயற்பியல்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியல் துறையில் சிறந்த சாதனை புரிந்தவருக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

சிறந்த அறிவியலாளரும் பெருந்தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் சுவீடன் நாட்டு வங்கியில் பெருந்தொகை வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வைப்புத்தொகையில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை, கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இதேபோல் உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வில்லியம் கேலின், சர் பீட்டர் ராட்கிளிப், கிரேக் செமன்சா ஆகிய மூவருக்கு வழங்கப்படுவதாக சுவீடிஸ் அகாடமி அறிவித்துள்ளது.

செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பைக் கண்டறிந்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயற்பியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version