2020 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவை சேர்ந்த பால் ஆர். மில்க்ரோம் ((paul r milgrom)), ராபர்ட் பி. வில்சனுக்கு ((robert B wilson)) ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஏல கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியதற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.