2019 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவிக்கப்படும். அதன்படி மருத்துவ துறையில் சாதனை படைத்ததற்காக அமெரிக்காவின், வில்லியம். ஜி.கெலின், மற்றும் ஜார்ஜ் எல்.சமன்ஸா, இங்கிலாந்தின் பீட்டர் ஜெ.ராட்கிளிஃப் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை கிரகிக்கிறது என்பது தொடர்பாகவும், அவற்றை மாற்றியமைத்து தகவமைப்பது தொடர்பாகவும் மேற்கொண்ட ஆராய்சிக்காக இந்த மூவருக்கும் வழங்கப்பட உள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு இவர்களின் முடிவுகள் மிகுந்த பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.