சீன படைகள் முழுவதும் விலக்கப்படும் வரை, படைகளை திரும்பப்பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதத்தில் இந்திய சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனிடையே கடந்த மாதம் 5ஆம் தேதி நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின், இரு தரப்பும் படைகளை விலக்கி வருகின்றன. ஆனால், பங்கோங்சோ உள்ளிட்ட சில பகுதிகளில், சீனா படைகளை விலக்கவில்லை என தகவல் வெளியானது. அதே சமயத்தில் இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீன தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டுப்பாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதில் இந்தியா அவசரம் காட்டாது என சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.