துணிகளெல்லாம் தன்னை தானே தைத்து கொண்டு விட்டால் ,ஆடைஉலகம் எப்படி இருக்கும்?.அன்றுதொட்டு இன்றுவரை அதிசயங்களை நிகழ்த்திக்காட்டி மனித சமுதாயத்தை மாறி மாறி குழப்புவதிலும் பிரம்மிக்க வைப்பதிலும் அறிவியலும் ஆண்டவனும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவே தெரிகிறது.விஞ்ஞான அறிவும் வித்தியாசமான தேவைகளும் இணைகிற வேளையில் வியப்பூட்டும் புதுமை ஒன்று நடந்தேறும்.அப்படி பத்தோடு பதினொன்றாக வந்து சேர்ந்த கடைசி புதுமை ஒன்றுதான் “தானே தைத்து கொள்ளும்” துணிகள். தானே தன்னை சீரமைத்து கொள்ளும் துணிகள் பற்றி ஏற்கனவே ஆராய்சிகள் பல நடந்திருந் போதும்கூட ஆடை உலகில் இது ஒரு புரட்சி தான் என்பதில் ஐயமில்லை.உண்மையில் இந்த தொழில்நுட்பம் வரவேற்கவேண்டியதும் ரசிக்கதக்கதும் ஆகும்.ஆடைகளில் சிராய்ப்புகள் , கிழிசல்கள் இருப்பது ஒன்றும் அரிதல்ல. உண்மையில் அது பெரும்பலானோர்க்கு ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் உயிரியல் துறை ,வேதியியல் துறை ,வாயுக்கசிவு ஏற்படும் இடங்கள் மற்றும் கதிர்வீச்சு உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு உடைகள் (Hazmat Suits)என்றளவில் அவற்றில் சேதமிருப்பதென்பது வாழ்வா சாவா? பிரச்சனை அல்லவா? இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த தொழில் நுட்பத்தை பார்க்கப் போனால் இந்த மாதிரியான தன்னை தானே சீரமைத்துக்கொள்ளும் துணி என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
எப்படி இந்த எண்ணம் தோன்றியது?
ஏற்கனவே இதுபோன்ற ஆய்வில் கிடைத்தவைகள் வேகமாக செயல்பட கூடியவை என்றாலும், ஈரமான மற்றும் உலர்ந்த என்று இரு நிலைகளிலுமே சேதமடையக்கூடியவை. அப்படி இல்லாத ஒரு துணியை கண்டறிய எண்ணியதால் இதை செய்தோம் என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள். அப்படி என்னதான் பொருள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது என்றால் அது சற்று வியப்பாகவும் அதே சமயம் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது. கடல் உணவுகளில் முக்கியமான ஒன்றான கணவாய் மீன்களே(Squid fish) இந்த ஆய்வின் கதாநாயகர்களாம். கணவாய் மீன்களின் உணர்நீட்சிகளில் (Tentacles))உள்புறமாக இருக்கும் உறிஞ்சு
குழாய்களில்(Suction Cups) இருந்து வெளிவரும் மூலக்கூறுகளை பயன்படுத்தி துணியின் மேல் முலாம்(Coating) செய்வதற்கான பூச்சை தயார் செய்கிறார்கள் .அதிலும் குறிப்பாக அந்த உறிஞ்சுகுழாய்களின் மேல்வட்டச் சுற்றில் இருக்கும் பற்கள் போன்ற அமைப்பை பயன்படுத்துவது துணியின் உருதித்தன்மையை வலுப்படுத்தும்,கணவாய் மீன்கள் அவற்றை பயன்படுத்திதான் எதிலும் உறுதியாக பற்றிகொள்ளும். கணவாய்களின் வளைய பற்களின் புரதம்தான் இந்த பூச்சுதயாரிப்பில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த புரதம் ஈரப்பதமான நிலைமையிலும் சரி, உலர்ந்த நிலையிலும் சரி, கடினமாகவும் மீள்தன்மையுடனும் இருக்கும் தன்மை கொண்டவை.
எப்படி வேலை செய்கிறது?
கணவாய் மீன்களின் புரதம் கொண்டு தயாரிக்கப்பட அந்த பூச்சு துணியின் மேல் பூசப்படுகிறது. பூச்சு செய்யப்பட்ட துணி நீரில்
ஊறவைக்கப்படும்பொழுது ,புரதம் துணிகளிலுள்ள துளைகள், சிராய்ப்புகள்மற்றும் ஒட்டவைக்கும் பாகங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து வினைபட்டு ஓட்ட வேண்டிய பாகத்துடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி தானே ஒட்டிகொள்கிறது. இப்படி ஏற்படுத்தப்படும் பிணைப்பின் வலிமை அந்த புரதத்தின் வலிமை போலவே ஈரமான, மற்றும் உலர்ந்த நிலைகளிலும் வலிமையாகவும் மீள்தன்மயுடனும் விளங்கும் என்பதால் மீண்டும் மீண்டும் அதே சிக்கல் ஏற்படாமல் இருக்கும் என்கிறார் விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான வால்டேர் டிரெஸ்ஸிக் (நவல் ஆராய்ச்சிக்கூடம்,வாஷிங்டன்,அமெரிக்கா).
இந்த தொழில்நுட்ப வளர்ச்சி ஆடைபொறியியலில் (Textile Engineering)புதுபுரட்சி ஒன்றை வரவழைக்கப் போகிறது என்பது உண்மை. அதுபோக,.இந்ததுறை மட்டுமல்லாது பேஷன் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்கு இது வழிவகுக்கும் .மேலும் ஆடைகழிவுகள் குறைக்கப்பட்டு சுகாதாரம் முன்னேறவும் இந்த தொழில்நுட்பம் மிகுந்த உதவிகரமாக இருக்கும்.