இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில், கடந்த 2016 செப்டம்பரில் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் எனும் துல்லியத் தாக்குதல் இந்திய மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றும் மக்களால் இது பெருமையான நினைவு கூரப்படுகிறது. இதனை விரும்பாத காங்கிரஸ் கட்சி, இதற்கு முன்னர் தங்கள் ஆட்சியில் 6 முறை சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்ததாகவும், அதைத் தாங்கள்தான் வெளியே கூறவில்லை என்றும் சமீபத்தில் கூறியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கூறியது அப்பட்டமான பொய் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து பெறப்பட்ட செய்தியில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஜம்முவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சவுத்ரி என்பவர் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம், ‘கடந்த 2016 செப்டம்பரில் மோடி அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் முன்னர் இந்தியாவில் சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் எதுவும் நடந்துள்ளதா?’ – என்று கேள்வி கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், ‘முன்பு அப்படி நடந்ததற்கான தரவுகள் ஒன்றும் இல்லை’ – என்று கூறி உள்ளது. இந்த பதில் இந்தியா டுடே தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்டு, காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டில் செய்தி நிறுவனமான பி.டி.ஐ. இதே கேள்வியை இந்திய இராணுவத்தின் ஆபரேஷன் பிரிவு டைரக்டர் ஜெனரலிடம் ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட போது, அவரும் ‘முன்பு இது போல சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்ததற்கான எந்தத் தரவும் இல்லை’ – என்றே பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், ’தேசப் பாதுகாப்பு விவகாரங்களில் கூட காங்கிரஸ் பொய் சொல்லும் எனும் போது, அக்கட்சி கூறும் எந்தத் தகவலைத்தான் நம்புவது?’ – என்று காங்கிரசை நோக்கி மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அதிக அரசியல் நெருக்கடியைத் தரும் விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.