பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் இடம் பெறவில்லை: விஜய் கோகலே

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சீன பிரதமரை சந்தித்தது குறித்து பேசப்பட்டது என்றும், ஆனால் விரிவாக எதுவும் பேசப்படவில்லை எனவும் கூறினார். வர்த்தக ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையே முன்னேற்றத்தை ஏற்படுத்த சீனா நடவடிக்கை எடுக்கும் என சீன அதிபர் உறுதியளித்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விஜய் கோகலே தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று கூறிய விஜய் கோகலே, சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். சர்வதேச அளவில் இறக்குமதி, ஏற்றுமதியில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய வரைமுறைகள் கொண்டு வருவது குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version