அணையை கட்டியே தீருவோம்- அடம்பிடிக்கும் கர்நாடகா அரசு..

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், புதிய அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை, விரைவில் மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாது அணை கட்டப்படும் என்றும், கர்நாடக அரசு இதில் உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.

மேகதாது அணை கட்டுவதற்கு முதல் திட்ட அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு முழு உரிமை உள்ளது என்றும் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்டவாறு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை, ஒவ்வொரு காலத்திற்கும் தடையில்லாமல் கொடுக்க வேண்டும் என்பதை ஆணையம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை தெரிவித்தார். மேகதாது அணை திட்டத்தை நூறு சதவீதம் செயல்படுத்துவோம் என்றும், இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பசுவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேற்கண்ட செய்தியை காட்சிபதிவுகளுடன் காண
↕↕↕

 

Exit mobile version