திமுக நடத்தும் குடிநீர் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு தரவில்லை-ராஜன் செல்லப்பா

திமுக நடத்தும் குடிநீர் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்

மதுரை தல்லாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமமுக கட்சியில் இருந்து விலகிய ஏராளமான நிர்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மதுரை உத்தங்குடி பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளை பொன்னாடை அணிவித்து ராஜன் செல்லப்பா வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை தவிர பிற மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்றார். சென்னையில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை தமிழக அரசு சிறப்பாக சமாளித்து வருவதாக கூறிய அவர், குடிநீர் தட்டுப்பாடு குறித்து திமுக நடத்தும் போராட்டங்களால் எந்த வித பலனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version