நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசுக்கு திட்டமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.
படுக்கை வசதிகள் இல்லாதது, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த 10 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.