சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்துத் தருமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில், சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஆவணியாபுரம் மலைக்கு பின்புறம் உள்ள ஆற்றங்கரையில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் உள்ளது. ஆனால், உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல, பாதை இல்லாமல், வயல்வெளிகளில் வழியாக கொண்டு செல்கின்றனர். மழைக்காலங்களிலும், விளைச்சல் அதிகம் நிறைந்த நேரத்திலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சுடுகாட்டு பாதை அமைத்துத் தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version