இளையராஜா அனுமதியின்றி பாடல்களை யாரும் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் இசையமைத்த பாடல்களை அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம், கிரி டிரெடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்  பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, இளையராஜா இசையமைத்த பாடல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல் மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இசைப் போட்டிகள் தொடங்கி ரேடியோ மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்டவைகளில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அவரின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version