எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, டிடிவி தினகரனாக இருந்தாலும் சரி அதிமுவில் இருந்து ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தும் விழா திருவாரூர் மாவட்டம், குடவாசலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டு, அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது என்றார். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.