தற்போதுள்ள அரசியல் சூழலில் யாராலும் நிலையான ஆட்சியை தரமுடியாது என்று கர்நாடகவின் காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 23ம் தேதியன்று, கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 6 வாக்குகள் வித்தியாசதில் முதல்வர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 105 எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இந்தநிலையில், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் கடித்தத்தின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் வரை பாஜக-வினர் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இத்தகைய அரசியல் சூழலில், யாராலும் நிலையான ஆட்சியைத் தரமுடியாது என்று தற்போது காபந்து முதல்வராக உள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.