பணம் அதிகாரம் படைத்தவர்களால் நீதித் துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கவைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் தொடுத்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்றனர்.
பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித் துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என கூறிய நீதிபதிகள், கடந்த 4 ஆண்டுகளாக நீதித்துறை மீது இதுபோன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடப்பதாக வேதனை தெரிவித்தனர்.