இலங்கையில் தமது கட்சியின் ஆதரவு இல்லாமல் அதிபராக எவராலும் வர முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை இரத்தின புரியில் இலங்கை சுதந்திரக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா தனது கட்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுஜன பெரமுனவின் இரண்டாம் வரிசைத் தலைவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறினார். தேர்தலில் வெற்றி பெற 51 சதவீதம் வாக்குகள் பெற வேண்டிய நிலையில் பொதுஜன பெரமுன கட்சியால், இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியுமா என மைத்திரிபால சிறிசேனா கேள்வி எழுப்பினார். அந்த வகையில் தமது கட்சியின் ஆதரவு இல்லாமல் அதிபர் தேர்தலில் எவராலும் வெற்றி பெற முடியாது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.