இலக்கியத்திற்கான நோபல் பரிசைத் தேர்வு செய்யும் குழுவான ஸ்வேதிஷ் அகாடமியில் மீ டு சர்ச்சையால் எற்பட்ட குழப்பங்களால் இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடையாது என்று அறிவிக்கபட்டுள்ளது.
1901 முதல் இன்று வரை இலக்கியத்துக்கான நோபல் பரிசை வழங்கி வரும் ஸ்வேதிஷ் அகாடமி வரலாற்றில் முதல்முறையாக நோபல் பரிசு வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே கிடையாது.
பிரபல பிரெஞ்சுப் புகைப்படக் கலைஞரான ஜேன் கிளாட் அர்னால்ட் மேல் அளிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை முன்னிட்டுத்தான் தொடங்கியது இந்த குழப்பம்,
அர்னால்ட்டின் மனைவியும், கவிஞருமான கேத்ரினா ஃப்ரோஸ்ட்மென் அகாடமியின் 18 உறுப்பினர்களுள் ஒருவருமாவார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார் அர்னால்ட். விவாதம் வலுக்க 18 ல் 6 பேர் அகாடமியின் குழுவிலிருந்து வெளியேறினர். அகாடமியில் மேலும் பிரிவு ஏற்படுத்தும் அளவிற்கு இந்த பிரச்சினை பெரிதாய் வளர, வேறு வழியின்றி இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ரத்து செய்தது ஸ்வேதிஷ் அகாடமி.
அடுத்த ஆண்டு 2019ல் இலக்கியத்திற்கு இந்த ஆண்டின் விருதையும் சேர்த்து இரண்டு நோபல் பரிசுகள் என்றும் அறிவித்துள்ளது.