நியூயார்க்கை முழுமையாக தனிமைப்படுத்த அவசியமில்லை – டொனால்டு டிரம்ப்!

நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நியூயார்க் நகரை முழுமையாக தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ, இத்திட்டம் போர் அறிவிப்பு போன்றது என விமர்சித்தார். இந்நிலையில் நியூயார்க் நகரை முழுமையாக தனிமைப்படுத்தும் திட்டத்தில் இருந்து அதிபர் டொனால்டு டிரம்ப் பின்வாங்கியுள்ளார்.

Exit mobile version