மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் ஒப்புதல் கர்நாடகாவிற்கு தேவையில்லை என்று மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு அம்மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மேகேதாட்டு அணையை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் கர்நாடக அரசுக்கு தேவையில்லை என்று மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் சட்டப்படியானது என்று கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமான தீர்ப்பை பெற மாநில அரசின் வழக்கறிஞர்கள் வாதிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால் அது கர்நாடகத்திற்கு பின்னடைவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.