ரயில் வருகையை இனி வாட்ஸ் அப் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய ரயில் எப்போது வரும் என்று தவிப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்கு ரயில்வே துறை தீர்வை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக “வாட்ஸ் அப்” மூலம் ரயில் பயண சேவையை நேரடியாக உடனுக்குடன் பெற புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 7349389104 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். 7349389104 எண்ணிற்கு தகவல் பெற விரும்பும் ரயில் எண்ணை அனுப்பினால் அடுத்த 2 நொடிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் அனைத்து தகவல்களும் வந்து விடுகிறது. இந்த சேவையை ரயில்வே துறை, ‘’மேக் மை ட்ரிப்’’ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கிறது.