எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என அந்த வங்கி தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார்.
வங்கி சேவையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது எஸ்பிஐ வங்கி. இந்த வங்கியில், குறைந்த பட்ச இருப்புத் தொகையாக, பெருநகரங்களில் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பகுதிகளில் ரூ.3 ஆயிரமும் கட்டாயம் வைத்திருக்கவில்லை இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதன் மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.