இனி வரும் காலங்களில் சீனக் கருவிகளை பயன்படுத்தவேண்டாம் – தொலைத்தொடர்புத்துறை உத்தரவு!

சீனாவில் தயாரிக்கப்பட்ட கருவிகளை பயன்படுத்தவேண்டாம் என இந்தியத் தொலைத் தொடர்புத்துறை தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் BSNL உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சீன பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த சில தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்திய தொலைத் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் BSNL, MTNL உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் 4ஜி தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பணிகளில் சீன கருவிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டுமெனவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கருவிகளை பயன்படுத்தவேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி அறிவித்த ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின்படி கூடுமானவரை இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version