அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா இருப்பதாக டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கடந்த மாதம் 28-ந் தேதி நடைப்பெற்ற ஜி-20 மாநாட்டின் போது சந்தித்த பிரதமர் மோடியும், டிரம்பும், இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் சந்தித்து வரி விதிப்பு குறித்து பேச வேண்டும் என முடிவெடுத்தனர்.
இந்நிலையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இந்தியா நீண்ட காலமாக அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதை, இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என மீண்டும் கூறியுள்ளார்.