தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை என பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகேயுள்ள புட்லூரில், தமிழகத்தில் உள்ள 16 மாவட்ட தலைநகரங்களில், பாஜகவின் கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், தமிழக மொழியானது மிகவும் தொன்மையானது எனவும், தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பது தமிழகத்திற்கு மட்டும் அல்ல, பாரதத்திற்கே பழமையான கலாச்சார தொன்மையை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.