நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் தங்கமணி

வெளிநாடுகளில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் 1077 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறிய அவர், அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்டத்திற்கு 2 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version