திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிய அமைச்சர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கியுள்ள 884 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், காந்தி மார்க்கெட் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சமூக இடைவெளியுடன் ஐந்து இடங்களில் மார்க்கெட் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 2 ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியிருப்பதாகவும், கூட்டத்தை தவிர்த்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

 

Exit mobile version