இந்தியாவில் 400 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று கிடையாது – அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதில், அடுத்த 2 அல்லது 3 வாரங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதாகவும், சீனாவில் கொரோனா வைரஸால் முதல் நபர் பாதிக்கப்பட்ட செய்தி ஜனவரி 7 ஆம் தேதி வெளியான நிலையில், ஜனவரி 8 ஆம் தேதியே இது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது என தெரிவித்தார். இதை அடுத்து ஜனவரி 17 ஆம் தேதி சுகாதார ஆலோசனைகளை வழங்கி, இந்திய சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது என கூறினார். தற்போது இந்தியாவில் 400 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று கிடையாது என தெரிவித்த அவர்,கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதில், அடுத்த 2 அல்லது 3 வாரங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என கூறினார்.

Exit mobile version