எதிரிகள் எதிர்பார்ப்பது போல அ.தி.மு.க.விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிரிகள், துரோகிகள் எதிர்பார்ப்பது போல, அ.தி.மு.க.-விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாரதியார், கட்டபொம்மன், வா.உ.சிதம்பரனார் போன்றோரை நம் கண்முன் கொண்டு வந்தவர் சிவாஜி கணேசன் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்துப் பேசிய அவர், எதிரிகள், துரோகிகள் நினைப்பது போல அ.தி.மு.க.-விற்குள் எந்த பிளவும், சச்சரவுகளும் வராது என்றார்.

Exit mobile version