இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை

திருவண்ணாமலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்ட நிலையில், புதிய நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக வந்திருக்கும் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதால், இறந்தவர்களின் எடுத்து செல்ல ஆம்புலனஸ் ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதால், சடலங்களை ஆட்டோவில் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

Exit mobile version